நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்…! கருத்துக்கணிப்பில் முந்தும் ஜோ பிடன்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்பை விட ஜோ பிடன் 10 சதவீதமம் முன்னிலை வகிக்கிறார் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் களம் இறங்கி உள்ளார். மற்றொரு புறம் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பும் களத்தில் உள்ளார்.

இந் நிலையில் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் தேர்தலில், ட்ரம்பை விட ஜோ பிடன் 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், ட்ரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு 52 சதவீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.

அரிசோனா, புளோரிடா, ஜோர்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர், பென்சில்வேனியா உட்பட்ட 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பிடன் முன்னிலை வகிப்பதாக இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அக்டோபர் 29 முதல் 31 வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத வாக்காளர்கள் ட்ரம்ப் கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதம் தவறு என்று கூறியுள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed