டிக்ஸ்வில்லி:
மெரிக்க அதிபர் தேர்தலில் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் நடந்த வாக்குப்பதிவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்கனவே 35 சதவிகிதம் அளவுக்கு ஓட்டுகள் பதிவாகியுள்ள நிலையில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

டிஸ்க்வில்லியில் தேர்வு செய்யப்படும் குறிப்பு
டிஸ்க்வில்லியில் தேர்வு செய்யப்படும் குறிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பை நள்ளிரவிலேயே நடத்தி முடிவை அறிவிக்கும் கிராமம்  ஹாம்ஷயர் மாகாணத்தின் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியாகும்.
இந்த டிக்ஸ்வில்லி நாட்ச் கிராமத்தில்  மொத்தமே 12 பேர்தான் உள்ளனர்.  இந்த  தேர்தலில் 12 பேரில் எட்டு பேர் மடடுமே வாக்களித்தனர். இதில்,  நான்கு ஓட்டுகளுடன் ஹிலரி கிளிண்டன்  முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள 2000, 2004, 2008 தேர்தல்களில், இந்த கிராமத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் அடுத்த அமெரிக்க அதிபராக தேர்வு பெறுவார் என்பது அவர்களின் நம்பிக்கை. இதுவரையிலும் அப்படித்தான் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இந்த தடவை அதிக வாக்குகள் வாங்கியுள்ள ஹிலாரி கிளிண்டன் தான் அதிபராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.  நாளை காலை இறுதி முடிவு தெரியும்.