அமெரிக்க தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் காரசார விவாதம்!

hilar-trump

வாஷிங்டன்:

நேற்று இரவு நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில், ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 8ல் நடைபெற இருக்கிறது. இதில் களம் காண குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில், ஹிலாரி – டிரம்ப் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி துவங்கியது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் விவாதம் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கும், டொனால்ட் டிம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்கள்.

பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து நேற்று நடைபெற்ற நேரடி ஒளிபரப்பில் விவாதிக்கப்பட்டது.

ஹிலாரி கிளிண்டன்,  அரசில் பதவி வகித்த போது நாட்டின் பிரச்சனைகளில் பலவற்றுக்கு அவரே காரணமாக இருந்தார் என்று அவரை தொலைக்காட்சி விவாதத்தின் போது பலமுறை இடைமறித்த டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

மேலும், அமெரிக்க அதிபராக பதவி வகிக்கத் தேவையான பலம் ஹிலாரிக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

டொனால்ட் டிரம்ப் அவருடையே கனவுலகிலேயே வாழ்கிறார் என்றும் அவர் அவருடைய வருமான வரி கணக்கு விஷயத்தை வெளியிடாமல் மறைக்கிறார் என்றும் ஹிலாரி குற்றம் சாட்டினார்.

ஆனால் டொனால்ட் டிரம்ப் ,ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த காலத்தில் அனுப்பிய 30,000க்கும் மேற்பட்ட மின்ன்ஞ்சல்களை வெளியிட்ட உடன், தான் தனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவேன் என்றார்.

மேலும் விவாதத்தில் ஹிலாரி பேசியதாவது: 

குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும், நடுத்தர மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் அமல்படுத்தப்படும் புதிய திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றும்  பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே டிரம்ப் ஆதரவளிப்பார் என்றார். வரிச்சலுகைகளை கொண்டு வருவதன் மூலம் நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும்

விவாதத்தில் டிரம்ப் பேசியதாவது:

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனர்களும், மெக்ஸிகர்களும் தட்டிப் பறிக்கின்றனர். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். வெளியுறவு அமைச்சராக இருந்த போது ஹிலாரி அமெரிக்காவின் நிலையை உயர்த்தவில்லை. வரிச்சலுகை மூலம் மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றார்.

இந்த தொலைக்காட்சி விவாதத்தை 10 கோடி பேருக்கு மேல பார்திருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: debate!, Hillary, Trump, US election, world, அமெரிக்க தேர்தல்:, காரசார, டிரம்ப், விவாதம்!. உலகம், ஹிலாரி
-=-