Random image

வரி உயர்வால் பாதிக்கப்படும் அமெரிக்க ஏற்றுமதியாளர்கள்

வாஷிங்டன்

மெரிக்க இறக்குமதி வரி உயர்வால்  அமெரிக்க ஏற்றுமதியாளர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா தற்போது சீனாவின் மீது நடத்தி வரும் வர்த்தகப் போரினால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும்  வரியை உயர்த்தியது.   அத்துடன் இந்த வரி உயர்வை ஒட்டி சீனா உள்ளிட்ட் பல நடுகளும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி உள்ளன.

இதனால் சீனா அமெரிக்காவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கி விட்டது.    உதாரணமாக சோயா பீன்ஸ் உள்ளிட்ட கால்நடை தீவனங்களை அமெரிக்காவில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்துக் கொண்டிருந்த சீனா அதை அடியோடு நிறுத்தி விட்டது.

பெரும்பாலான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவே முக்கிய சந்தையாக இருந்து வந்தது.   தற்போது சீனா அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.   இது அமெரிக்க ஏற்றுமதியாளர்களின் வர்த்தகத்தை பெருமளவில் பாதிக்க தொடங்கி உள்ளது.

அதே போல பல அமெரிக்க பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு உள்ளது.   தற்போது ஏற்றுமதிக்கான வரி உயர்வால் இந்தப் பொருட்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது.   சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தப் பொருட்களுக்கும் விலை உயர்வால் விற்பனை சரிய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அமெரிக்க பொருளாதார நிபுணர் ஒருவர், ”டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்துள்ள வரி உயர்வால் அமெரிக்கப் பொருட்களை அமெரிக்கர்கள் மட்டுமே உபயோகிக்கும் நிலை  உருவாகி உள்ளது,   அத்துடன் நமது பொருட்கள் யார் கைக்கும் போய் சேராது,  நமக்கே என்றும் உரியதாக இருக்கும்” என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.