வாஷிங்டன்

கொரோனா சோதனையில் அமெரிக்கா தவறி விட்டதாக அரசு சுகாதார அதிகாரி ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் உள்ளது.  தற்போது 1300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது உறுதி ஆகி உள்ளது  அந்நாட்டு அதிபர் அமெரிக்காவுக்கு வருவோர் அனைவரும் சோதிக்கப்படுவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்த அவர் மேற்கொண்டு விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க துணை அதிபர் மைக் நேற்று முன் தினம் அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது எனக் கேட்டதற்கு அதை நிபுணர்கள் சொல்வார்கள் எனக்கூறி விட்டார்.  சுமார் 11000க்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்பட்டதாக தகவல் வந்த  போதிலும் ஒருவரே இரு இடங்களில் மாதிரிகளை அளித்திருப்பதால் சரியாகச் சொல்ல முடியாதெனச் சுகாதாரத் துரை தெரிவித்தது

அது மட்டுமின்றி பலர் தனியார் சோதனை நிலையங்களில் சோதனை செய்துக் கொண்டுள்ளதால் அரசிடம் சரியான தகவல்கள் கிடையாது எனவும் கூறப்பட்டது.   இவ்வாறு கொரோனா சோதனை குறித்த சரியான தகவல்கள் இதுவரை கிடைக்காமல் உள்ளது.   எனவே அமெரிக்காவில் நடைபெறும் கொரோனா சோதனைகள் குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் நிலைய அதிகாரி ஆண்டனி ஃபாசி, “கொரோனா சோதனையில் அமெரிக்கா தவறி விட்டது எனவே கூற வேண்டும்.   இந்த சோதனையில் அமெரிக்கா பல இடர்பாடுகளை எதிர் கொண்டுள்ளது.   இந்த சோதனைக்கு மற்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் போல் எங்களிடம் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்” எனக் கூறி உள்ளார்.