டிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்

திபர் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு டிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்க உத்தரவை அமெரிக்க ஃபெடெரல் நீதிமன்றம் நீக்கி உள்ளது.

ஆண்டுதோறும் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 85 ஆயிரம் பேருக்கு 3 ஆண்டுகளுக்கு ஹெச்1பி விசாவை அமெரிக்கா வழங்குகிறது. இந்த விசா புதுப்பிக்கத்தக்கதாகும்.  அமெரிக்காவில் இந்தியா, சீனாவைச் சேர்ந்த 6லட்சம் பேர் ஹெச்1பி விசாவில் தங்கி பணி புரிகின்றனர். அதிபர் டிரம்ப் விசா கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பைத் தேர்தலுக்கு ஒரு வாரம்முன்பாக வெளியிட்டார். ஏற்கவே ஜூன் மாதத்தில் ஹெச்1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தப்படும் என்றஅறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  இது குறித்து அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதமும் அதிகரிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.   கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலையிழந்த அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, அதாவது வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணி புரிவோருக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பில் வேலை இழந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்து அனுமதி மறுக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த ஃபெடரல்  நீதிமன்ற நீதிபதி ஜெப்ரி ஒயிட், ‘‘இதில் போதிய வெளிப்படைத் தன்மையை அரசு பின்பற்றவில்லை. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டு அக்டோபர் மாதத்தில் அமல்படுத்தப்பட்டது. அதற்கு சில மாதங்கள் முன்பாகவே இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வரப்போவதான செய்திகளை அதிபர் மாளிகை உலவ விட்டிருந்தது, இதையொட்டி இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’  என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.