ஈரான் வான்வழியில் பறப்பதை நிறுத்திய அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள்

--

நியூயார்க்

மெரிக்க விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்கள் ஈரான் வான்வழியில் பறப்பதை நிறுத்தி உள்ளன.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இருந்த  பகை மேலும் தீவிரமடைந்துள்ளது.    இதை ஒட்டி அமெரிக்க விண்வெளி  போக்குவரத்து துறை அமெரிக்க விமானங்கள் ஈரான் நாட்டு வான்வழியில் பறப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டது.

அமெரிக்காவின் பல விமான சேவை நிறுவனங்கள் இந்த வான்வழியில் தற்போது தங்கள் விமானங்களை பறக்க விட்டு வருகின்றன.   தற்போதுள்ள இரு நாடுகளின் பகையால் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம் என அச்சம் நிலவுகிறது.   கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான்வழியில் பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் யுனைடெட் ஏர் விமான சேவை நிறுவனத்தின் பல விமானங்கள் இந்த வான் வழியில் பறப்பதால் பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவர்க் நகருக்கும் இந்தியாவின் மும்பை நகருக்கும் இடையிலான விமான சேவை முழுவதுமாக நிறுத்தபட்டுள்ளது.

அதை ஒட்டி நேற்று மேலும் இரு விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் தங்கள் விமானங்களை ஈரான் வான் வழியில் பறப்பதை நிறுத்தி உள்ளன.  ஜப்பான் நாட்டின் விமான சேவை நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஏ என் ஏ ஹோல்டிங்ஸ் நிறுவனங்களும் ஈரான் வான் வழியில் பறப்பதை நிறுத்தி உள்ளன.