டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் அமெரிக்க முன்னாள் மாடல் அழகி!

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் மாடல் அழகி ஆமி டோரிஸ், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, அந்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்ற, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது, டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒரு நேர்காணலின்போது அவர் இதைக் கூறியுள்ளார்.

கடந்த 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி, நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்றபோது, டிரம்பின் விஐபி அறைக்கு வெளியிலிருந்து குளியலறைக்கு வெளியே, டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றுள்ளார் டோரிஸ்.

அப்போது அவரின் வயது 24. “அப்போது, டிரம்ப் தனது நாக்கை எனது தொண்டைக்குள் இறக்கி, எனது உடல் முழுவதும் தாக்கி, என்னால் வேறெங்கும் நகர்ந்துசெல்ல முடியாத வண்ணம் இறுக்கமாகப் பிடித்திருந்தார். அவரின் கைகள் என் உடலில் அந்தரங்கப் பகுதிகளைத் துழாவின” என்றுள்ளார் டோரிஸ்.