வாஷிங்டன்

மெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளித்துள்ளது.

 

உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 11.43 கோடி பேர் பாதிக்கப்பட்டு 25.36 லட்சத்துக்கும் மேல் உயிர் இழந்துள்ளனர்.  இதில் 8.99 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 21.90 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 தற்போது அமெரிக்காவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அவை பிஃபிசர் நிறுவனம் மற்றும் மாடர்னா நிறுவனம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசிகள் ஆகும்.   இவை இரண்டும் இரு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.  அதிக அளவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போட வேண்டிய நிலை உள்ளது.

எனவே அமெரிக்கா மூன்றாம் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்க சோதனைகள் நடத்தி வருகின்றது.  அவ்வகையில் மூன்றாவது தடுப்பூசியான ஜான்சென் தடுப்பூசிக்கு தற்போது அவசரக் கால பயன்பாட்டுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  இந்த மருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பாகும்.