அமெரிக்க மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு

வாஷிங்டன்

மெரிக்க அரசு தங்கள் நாட்டு மக்கள் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

 

பாக்தாத் நகரில் நடந்த அமெரிக்க விமானப்படை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.   இந்த விமானத் தாக்குதலில் ஈரான் நாட்டுத் தளபதி சோல்மணி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.  இதை ஈரான் மற்றும் ஈராக் நாடுகளும் உறுதி செய்துள்ளன.

ஈரான் அதிபர் ஆயதுல்லா கோமேனிக்கு அடுத்தபடியான தலைமை பொறுப்பில் உள்ள சோல்மணிகொல்லப்பட்டது அப்பகுதியில் கடும் பபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஈரான் அதிபர் கோமேனி இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவை பழி வாங்க உள்ளதாகச் சபதம் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஈராக் நாட்டில் வசிக்கும் அனைத்து அமெரிக்கர்களும் ஈராக்கை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது.   அத்துடன் ஈராக்கில் அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்லாமிய போராளிகள் மீண்டும் தாக்குதல்  நடத்தலாம் என்பதால் யாரும் தூதரக அலுவலகத்து வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.