அதிபர் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த செனட் சபை – அரசு நிர்வாகப் பணிகள் முடக்கம்

அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல் வழங்காததால் அரசு நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

us

அமெரிக்காவில் இன்று கூடிய பாராளுமன்ற கூட்டத்தில் டிரம்ப் தலைமையிலான அரசின் செலவின மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி மசோதாவை நிறைவேற்றாஅமல் செனட் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசின் நிர்வாக பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

அரசின் நிர்வாக முடக்கம் காரணமாக சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்க உள்ள நிலையில் அரசின் முடக்கத்தால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால ஊதியம் இல்லாமல் வேலைப்பார்க்கும் சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் அகதிகள் ஊடுருவலை தவிர்ப்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு டிரம் 5பில்லியன் டாலர் தொகையை செனட் சபையில் கோரியிருந்தார். டிரம்பின் இந்த கோரிக்கைக்கு செனட் சபை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிர்வாக முடிக்கம் ஏற்பட்டது. நிர்வாக முடிக்கம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்படவில்லை. எனினும், விரைவில் அரசின் நடவடிக்கைகள் நடைபெறும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக டிரம்ப் பதவி ஏற்றபோது நிர்வாக முடக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.