புதுடெல்லி:

இந்தியருக்கு குடும்பத்துடன் தங்கி பணியாற்ற அனுமதிக்கும் ஹெச்- பி விசா வழங்க மறுத்த அமெரிக்க அரசுக்கு எதிராக அந்நாட்டு ஐடி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.


பிற நாட்டவர்கள் அமெரிக்காவில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்க்க தேவைப்படும் ஹெச்-1 பி விசா பெறுவதற்கான விதிமுறையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக்கியிருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணை வேலை செய்ய அனுமதிக்கும் விதியை திரும்பப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் 1 லட்சம் வெளிநாட்டினர் வேலை இழக்க நேரிடும் என்றும், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஹெச் 1 பி விசா முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அமெரிக்க அரசு மீது அந்நாட்டு ஐடி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கில், எங்கள் நிறுனத்துக்கு இந்தியாவிலிருந்து பிரகர்ஸ் சந்திர சாய் வெங்கட அனிஷெட்டியை வேலைக்கு அமர்த்தினோம்.
அவருக்கு ஹெச்-1 பி விசா வழங்க அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேறுதல் துறை மறுத்துவிட்டது.

இது பாரபட்சமான செயல். அவருக்கு எல்லா தகுதி இருந்தும் ஹெச் 1 பி விசா மறுக்கப்பட்டதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் முதுநிலை படிப்பை டெக்ஸாஸ் மாகாணத்தில் முடித்திருக்கிறார். மேலும் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி திட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார்.

திறமையான ஒருவருக்கு ஹெச்-1பி விசா தர மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.