அமெரிக்க ஐடி நிறுவன ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியர்கள் பாதிப்பு

புதுடெல்லி:

அமெரிக்க ஐடி நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவின் ஐடி நிறுவனமான டிஎக்ஸ்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிஎஸ்சி மற்றும் ஹெச்பி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது.

இந்த நிறுவனங்கள் இணைக்கப்பட்டபோது, டிஎக்ஸ்சி நிறுவனத்தில் 1.7 லட்சம் பேர் பணியாற்றியதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது, ஊழியர்களின் எண்ணிக்கை 1.33 லட்சமாக குறைந்துள்ளது. வேலை இழந்தோரில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாதி இருப்பர் என்று கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தின் கீழ் 43 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.