டிரம்ப் மன்னர் அல்ல, எச்-1பி விசா ரத்து உத்தரவை ரத்து செய்தது கலிபோர்னியா நீதிமன்றம்..

கலிபோர்னியா: வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசாவை இந்தஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ள டிரம்ப் அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த அமெரிக்க நீதிமன்றம், டிரம்ப் நாட்டின் மன்னர் அல்ல, அவர் அரசியல்அமைப்பின் சட்டத்தை மீறி உள்ளார் என கண்டனம் தெரிவித்து, எச்-1பி விசா ரத்து உத்தரவை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் எச்-1பி, எச்-2பி நுழைவு இசைவு (விசா) அளிப்பதை நிறுத்தி வைத்து அதிபா் டிரம்ப் பிறப்பித்திருந்தார். அதன்படி,  வெளிநாட்டவா்கள்  அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தேவையான  ஹெச்-1பி, ஹெச்-2பி போன்றவைகள் தற்காலி நிறுத்தி அதிபா் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவு வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக  அமெரிக்கா பொருளாதாரம் சரவை சந்தித்துள்ளதால்,  இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீளும் வகையில், வெளிநாட்டவர் களுக்கு வழங்கப்படும் எச்-1 பி உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்கள் இந்த ஆண்டுஇறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் இந்தியர்கள் இதுபோன்ற விசாக்கள் மூலமே அங்கு பணியாற்றி வருகின்றனர்.  மேலும்,   3 லட்சம் இந்தியர் வரை எச்1பி விசா பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அமெரிக்க அதிபரின் அதிரடி அறிவிப்பு காரணமாக பலரது வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியதாயின.

இதற்கு எதிராக கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்பட, தொழிலக கூட்டமைப்புகள் மற்றும் பல இந்தியர்களும் வழக்கு தொடுத்தனர். அதுபோல, அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த அமெரிக்க வர்த்தக சபை, விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கை நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை குறைக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகள் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த வடக்கு கலிபோா்னியா மாவட்ட நீதிமன்றம், அதிபா் டிரம்ப்பின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியேற்ற சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அதிபருக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்தது.

குடியேற்ற விதிகளை வகுக்க நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டிருப்பதாகவும், அவர் நாட்டின் மன்னர் இல்லை என்றும்  கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்காவில் சுமாா் 6 லட்சம் போ ஹெச்-1பி நுழைவு இசைவு பெற்று பணியாற்றி வருகின்றனா். இதில் 70 சதவீதம் போ இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதிபரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.