ன்ஹாட்டன்

மெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் கொரோனா சேவை செய்த அவசர சிகிச்சை நிபுணராகப் பணி புரியும் பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற நகரங்களில் மன்ஹாட்டன் நகரமும் ஒன்றாகும்.  இங்குள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு தலைவராக லோர்னா எம் பிரீன் என்னும் பெண் மருத்துவர் பணி புரிந்து வந்தார்.  தனது குடும்பத்துடன் வசித்து வந்த லோர்னா கொரோனா நோயாளிகளுக்குச் சேவை புரிந்து வந்தார்.

சமீபத்தில் லோர்னாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அதையொட்டி அவர் தனிமைப்படுத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது..    சுமார் ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு அவர் உடல்நிலை குணமடைந்தது.  மீண்டும் அவர் நோயாளிகளுக்கு சேவை செய்யச் சென்றுள்ளார்.    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிக்குச் செத்துக் கொள்ளாமல் வீட்டுக்குத் திரும்ப அனுப்பி உள்ளது.

இதனால் மனம் உடைந்த லோர்னா தனது குடும்பத்தினருடன் இது குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.   தனது சேவையை மருத்துவமனை ஏற்றுக் கொள்ளாததால் லோர்னா மனம் உடைந்துள்ளார். இவர் தனக்குத் தானே காயங்கள் ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இது குறித்துப் பல மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். லோர்னாவின் தந்தையும் ஒரு மருத்துவர் ஆவார்.  அவர் தனது மகள் ஒரு கதாநாயகியாக உயிர் துறந்துள்ளதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.   மேலும் தனது மகள் இறக்கும் வரை மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய தற்கொலைக்கான காரணத்தை இன்னும்  வெளியிடவில்லை.