பல உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு : அமெரிக்காவில் அரங்கேறும் அவலம்

நியூயார்க்

மெரிக்காவில் கொரோனா மரணம் அதிகரித்துள்ளதால் ஒரே இடத்தில் பல உடல்கள்  புதைக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அத்துடன் கொரோனாவல் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

இது உலகில் முதல் முறையாகும்.

இதுவரை நியூயார்க் நகரில் மட்டும் 7844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இடப்பற்றாக்குறை காரணமாகப் பல உடல்களை ஒரே இடத்தில் புதைக்கும் அவலம் அமெரிக்காவில் அரங்கேறுகிறது.

நியூயார்க் நகரில் உள்ள ஹார்ட் தீவு கல்லறையில் பல உடல்களை ஒரே இடத்தில் புதைத்துள்ளனர்.

இதை ஒரு ஆளில்லா விமானம் மூலம் புகப்படம் எடுக்கப்பட்டு அது வைராலாகி வருகிறது.