வாஷிங்டன்:

இந்திய தகவல் தொழில்நுடப் துறை மற்றும் அதன் ஊழியர்களை அதிகளவு பாதிக்கும் வகையில் ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறைகளை டிரம்ப் நிர்வாகம் கெடுபிடியாக்கியுள்ள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு புதிய கொள்கை வடிவமைப்பை வெளியிட்டுள்ளது. 3ம் நபர் தொழிற் கூடத்தில் பணியாற்றும் ஒரு தொழிலாளிக்கும், அங்கு வேலை அளிப்பவர்களுக்கும் இடையிலான உறவை பராமரிப்பது தொடர்பாக விரிவான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்-1பி திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் தற்காலிக விசா மூலம் வெளிநாட்டு தொழிற் வல்லுனர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்திக் கொள்ள முடியும். அமெரிக்காவில் வல்லுனர்கள் பற்றாகுறை உள்ள துறைகளுக்கு இவ்வாறு வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இதில் இந்தியர்கள் தான் அதிகம் பயனடைந்து ஹெச்-1பி விசா பெற்றனர். இதற்கு தேசிய ஒதுக்கீடு என்று எதுவும் கிடையாது. எனினும் இது இந்தியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்.

புதிய அறிவிப்பு மூலம் 3ம் நபர் தொழிற்கூடத்தில் பணியாற்றும் தொழிலாளி மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு இடையே ஒப்ப ந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நபர்களுக்கும் இடையே தொழிலாளி-உரிமையாளர் என்ற உறவு முறை செல்லுபடியாகும் காலம் வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு இந்த உத்தரவுகளை செயல்படுத்துகிறது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை ஹெச்&1பி விசா பறிப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து நேர்மையை உறுதி செய்யும் வகையில் விசா பரிசீலனை கடுமையாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.