ஐஎஸ்ஐஎஸ் போருக்கு மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள் குவிப்பு

வாஷிங்டன்:

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அராப் மற்றும் குர்திஷ் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்த படைக்கு ஆயுதம் மற்றும் வீரர்களை வழங்கி உதவி வருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து போரிடும் இந்த படைக்கு உதவும் வகையில் மேலும் ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இவர்கள் குவைத்தில் ரிசர்வ் படையாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக இந்த படை போர்களத்தில் எதிர்பாராதவிதமாக நடக்கும் அசம்பாவித சம்பங்களுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் வகையில் ரிசர்வ் படை செயல்படவுள்ளது. குவைத் சார்ந்த படைகளுக்கு உத்தரவிடுவதற்காக ரிசர்வ் படையை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகம் முடிவு செய்யாமல் விட்டுச் சென்றிருந்தது.

ஏற்கனவே குவைத்தில் உள்ள அமெரிக்க துருப்பு படையினர் இல்லாமல் இந்த படை செயல்படவுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜிம் மத்திஸ் ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பாக பதிலளிக்க பென்டகன் அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்க ஹெலிகாப்டர்கள், சிறிய அமெரிக்க படையை பயன்படுத்தியற்தற்கே ஒபாமா விமர்சனத்திற்கு ஆளானார். அதனால் அமெரிக்க படைகளை பயன்படுத்த வரையரை நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த வரையரை பரிசீலனை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே 6 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் அங்கு உள்ளனர். ஈராக்கிலும், சிரியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை வீழ்த்தியாக வேண்டும் என்று டிரம்ப் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே கூடுதல் படைகள் குவைத்தில் குவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.