டில்லி

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார், அதை 311 உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர், அதற்கு எதிராக 80 வாக்களித்தனர், இப்போது அதன் ஒப்புதலுக்காக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த  திருத்தப்பட்ட  சட்டத்தின்படி, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு டிசம்பர் 31, 2014 வரை வந்துள்ள இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு, சட்டவிரோத குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய ஷா, பிரதமர் நரேந்திர மோடி அரசில் எந்த மதத்தையும் சேர்ந்தவர்களுக்கு எந்த பயமும் இருக்கக்கூடாது என்று தெளிவுபடுத்தினார்.   மேலும் இந்த மசோதா அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வலிமிகுந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மையினருக்கு நிவாரணம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த மசோதா 130 கோடி இந்தியக் குடிமக்களின் ஒப்புதலைக் கொண்டுள்ளது என்றும், இந்த நடவடிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கூற்று தவறானது எஅன்வும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு இது உரிமைகளை வழங்கும் என்றும் ஷா கூறினார்.

இருப்பினும், இந்த மசோதாவைக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.

சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஒரு அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படுவது குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகக் கூறி உள்ளது  அந்த ஆணையம்,  “பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற முதன்மைத் தலைவர்களின் நடவடிக்கையால் இந்தியா மீது  பொருளாதாரத் தடை அறிவிக்க அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையம்,  ”இந்த மசோதா தவறான திசையில் நடைபெறும் ஒரு ஆபத்தான திருப்பம்; இது இந்தியாவின் மதச்சார்பற்ற பன்மைத்துவ வரலாறு மற்றும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து இயங்குகிறது,   இவற்றின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் முன் சமத்துவத்தை இந்த மசோதா எதிர்க்கிறது

ஆனால் எங்கள் அறிக்கைகளை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது   முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின் நாட்களிலிருந்து இந்தியா தொடர்ந்து மூன்றாம் நாட்டின் கருத்துக்களையோ அல்லது அதன் உள் விவகாரங்கள் குறித்த அறிக்கைகளையோ அங்கீகரிப்பதில்லை”  என்று கூறியுள்ளது.