வாஷிங்டன்

டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நடத்திய கலவரங்களுக்காக டிரம்பை அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் கடுமையாகச் சாடி உள்ளது.

ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதால் ஜோ பைடன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.  இதையொட்டி டிரம்ப் இனி அவசியம் பதவி விலக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது,  இதையொட்டி டிரம்ப் ஆதரவாளர்கள் நேற்று வாஷிங்டன் நகரை முற்றுகையிட்டு நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்கி உள்ளனர்.  இதில் ஒரு பெண் உயிர் இழந்துள்ளார். பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள பதிவில் “செனட் சபையில் ஜன்னல் அடித்து நொறுக்கும் கும்பலுக்கு எதிராகவும் பிரதிநிதிகள் சபையின் அறையை பாதுகாத்த அதிகாரிகளின் புகைப்படம், ஒவ்வொரு அமெரிக்கரின் நினைவாகவும், இன்றும்,என்றும் பல தறைமுறகளாக இருக்கும். இதுதான் டொனால்ட் டிரம்பின் மரபு என்பதை அது என்றும் நினைவுறுத்தும்.

 

ஜனாதிபதிகள் நம்மை விட்டு நீங்கும் போது பிரியாவிடை உரையை வழங்குவார்கள்.  ஆனால் அவர்களை விடச் சிறந்தவர் என தம்மைக் கூறிக் கொள்ளும் டிர்மப் பிரியாவிடையாக ஒரு கலவரத்தைத் தேர்வு செய்துள்ளார்.  அவர் கோபமுற்றிருந்த தனது ஆதரவாளர்களைத் தனது டிவிட்டர் பதிவின் மூலம் வாஷிங்டனுக்கு வரவழைத்து கலவரத்தை நிகழ்த்தி உள்ளார். தனது துணை ஜனாதிபதி தனக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகளை மாற்றுவார் என டிரம்ப் நம்பினார்.  ஆனால் அவர் மன்சட்சியுடன் நடக்க முற்பட்டதால் அவருக்கு எதிராகவும் தனது ஆதரவாளர்களைத் தூண்டி தலைநகர தாக்குதல் நடத்தி உள்ளார்.

நேற்று நடந்த ஒரு பெண்ணின் மரணம், காயங்கள், கண்ணீர்ப்புகை,. சொத்துக்கள் சேதம் பயம், அதிகாரிகள் பாதுகாப்புக்குத் தப்பி ஓடியது ஆகியவை அனைத்தும் தூண்டப்பட்டு நடந்தவை ஆகும்.  இது டிரம்பின் கலவரம் ஆகும்.   அவர் இவற்றைத் தூண்டிவிட்டு விட்டு தனது சுயநலத்தைத் திருப்திப் படுத்தி விட்டு ஓய்வு பெற உள்ளார்.

 நவம்பர் மாதமே தனது தோல்வியை அறிந்த டிரம்ப் தேர்தலில் மோசடி நடக்கும் எனது தனது விஷப் பிரச்சாரத்தை ஆதரவாளர்களுக்குப் பரப்பினார். இதற்கு அவருக்கு அவரது ஊடக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் உதவி புரிந்தனர், இது குறித்துப்  பல ஊடகவியலர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.  தேர்தல் முடிந்த பிறகும் பல வழக்கறிஞர்கள் இணைந்து போலி வழக்குகளை தொடர்ந்தனர்.  இதற்கான சரியான சாட்சிகளை அவர்களால் அளிக்க முடியவில்லை.

இதையொட்டி அவர் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தார்.  அவரது பொய் பிரசாரங்களையும் சிலர் நம்பினார்கள். அவர்கள் வாசிங்டனுக்குச் சென்று தங்கள் தலைவரின் போருக்கான அழைப்பை ஏற்று அமெரிக்காவின் துணைத் தலைவரைத் தாக்கத் துணிந்தனர்.

இவ்வாறு டிரம்ப் கலவரத்தைத் தூண்டுவார் என யூகிக்காத காவல்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நாம் குறை கூற முடியாது.  இதை முன்கூட்டி யாராலும் ஊகிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளது.  எனவே யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததால் எவ்வித முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே டிரம்ப் பல கொடூர விமர்சனங்களை வெளியிட்டு இருந்தார். ஒரு கொலையாளியைச் செயல் திறன் கலைஞர் எனவும் கொரோனா குணமாகக் கிருமி நாசினியைக் குடிக்கலாம் எனச் சொல்லியதும் இவற்றில் ஒன்றாகும்.  ஜனாதிபதி பதவியை ஒரு நகைச்சுவை கொண்ட கேலிக் கூத்தாக டிரம்ப் மாற்றி இருந்துள்ளார்.

இதற்கு முன்பும் பல ஜனாதிபதிகள் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்த போதும் டிரம்ப் ஒருவர் தான் தனது  பொய் பதிவுகள் மூலம் நாடே பற்றி எரியும் நிலையை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் அமெரிக்கச் சுதந்திரம் இதனால் மாறாது.  இவரைப் போன்றோருக்கு மக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தங்கள் பதிலை தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் ஏற்படுத்தி உள்ள கலவரம் அவரைப் பின்பற்றுவோருக்கு ஒரு கசப்பான மருந்து எனக் கூறலாம்.  அமெரிக்க குடியரசை யாரும் அழிக்க முடியாது.  உலகின் பல நாடுகளைப் போல் அமெரிக்காவிலும் மோசமான விளைவுகள் நிகழ்ந்துள்ளன.   சுதந்திரத்துக்கும் அராஜகத்துக்கும் இடையான ஒரு மெல்லிய கோட்டை துணை அதிபர் மற்றும் செனட் தலைவர் இறுதியாகக் கண்டுபிடித்தனர்.  ஆனால் டிரம்ப் இதை இப்போதும் கண்டு கொள்ளவில்லை.” என பதிந்துள்ளது.