பாகிஸ்தானுக்கு 30 கோடி டாலர் உதவியை ரத்து செய்த அமெரிக்க ராணுவம்

வாஷிங்டன்

பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்க ராணுவம் 30 கோடி டாலர் உதவித் தொகையை ரத்து செய்ய உள்ளது.

அதிபர் பதவி ஏற்றதில் இருந்தே டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.    அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானின் தாலிபான் மற்றும் ஹக்கானி தீவிர வாதக் குழுக்களுக்கு புகலிடம் அளித்ததாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதை ஒட்டி ஜனவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுக்கு பாதுகாப்பு நடவடிக்கைக்கான நிதி உதவியான 113 கோடி டாலரை அமெரிக்கா ரத்து செய்தது.   இதை ஒட்டி அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது.

டிரம்ப் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்காசிய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.    அதை பாகிஸ்தான் செயல்படுத்தாததால்  தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

அதனல் பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 30 கோடி அமெரிக்க டாலரை ரத்து செய்ய உள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.   அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இந்த நிதியை அமெரிக்க ராணுவத்த்தின் அவசர செலவுகளுக்கு பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.