வாஷிங்டன்:  இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவிடம் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 30வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய விவசாயிகள் போராட்டத்தில், அமெரிக்கா தலையிட வேண்டும் என இந்திய வம்சாவழி எம்.பி.க்களான  பிரமிளா ஜெயபால், டொனால்ட் நார்கிராஸ், பிரென்டன் எஃப் போயல், பிரையன் பிட்ஸ்பாட்ரிக், மேரி கே ஸ்கேன்லான், டெபி டிங்கில், டேவிட் ட்ரான் ஆகியோர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அதுபோல,  அமெரிக்க சீக்கிய கூட்டமைப்பின் துணைத்தலைவர் எம்.பி. ஜான் காராமென்டி, எம்.பி. ஜிம் கோஸ்டா, ஷீலா ஜேக்ஸன் லீ ஆகியோர் இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளதால், அவர்களுக்கு் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குடியுரசு கட்சியின் எம்.பி. டேவிட் ட்ரான் இந்திய அரசைவலியுறுத்தி உள்ளார்.

ஆனால், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மத்தியஅரசு அயல்நாடுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.