இந்தியாவில் நிறுவப்படவுள்ள அமெரிக்க அணு உலைகள்

வாஷிங்டன்: இந்தியாவில் 6 அமெரிக்க அணுசக்தி உலைகளை நிறுவ, இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உள்நாட்டு அணுசக்தி பயன்பாட்டிற்கான ஒத்துழைப்பை, இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்துவற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வியூக பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையின் 9வது சுற்றின் முடிவில், இந்தக் கூட்டு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா சார்பாக, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே மற்றும் அமெரிக்கா சார்பாக வெளியுறவுத் துறைக்கான கீழ்நிலைச் செயலாளர் ஆண்ட்ரியா தாம்ஸன் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்தார்கள்.

இருதரப்பு பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அணுசக்தி பயன்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தும் விதமாக, 6 அமெரிக்க அணுசக்தி உலைகள் இந்தியாவில் அமைக்கப்படவுள்ளதாய் கூறப்பட்டது.

– மதுரை மாயாண்டி