நியூயார்க்

மிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நிறுவன அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை பதியப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான காக்னிசெண்ட் பல நாடுகளில் தங்கள் கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது.   இந்த நிறுவனம் சென்னையில் உள்ள சோழிங்க நல்லூரில் சுமார் 2,50,000 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மிகப்பெரிய வளாகத்தை அமைத்துள்ளது.    இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் நீயூயார்க்கில் அமைந்துள்ளது.

இந்த வளாகம் அமைக்க உரிமம் பெற ஒரு கட்டுமான நிறுவனம் மூலம் காக்னிசண்ட் நிறுவனம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் (சுமார் ரூ.143 கோடி) லஞ்சம் அளித்துள்ளதாக புகார் எழுந்தது.    வெளிநாட்டு அதிகாரிகளுக்கு வெளிநாட்டில் லஞ்சம் அளிக்கப்பட்டாலும் அது அமெரிக்க சட்டப்படி குற்றம் என்பதால் நியூயார்க் நீதிமன்றம் இந்த குற்றத்தை விசாரித்து வந்தது.

இந்த விசாரணை முடிவில் காக்னிசண்ட் நிறுவனத்துக்கு 25 லட்சம் டாலர் (சுமார் ரூ.179 கோடி) அபராதம் விதித்துள்ளது.   அத்துடன் காக்னிசண்ட் நிறுவன முன்னாள் தலைவர் கோர்டன் கோபர்ன் மற்றும் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஸ்காவார்ட்ஸ் ஆகிய இருவர் மீதும் கிரிமினல் குற்றம் பதியப்பட்டுள்ளது.     இந்த குற்றத்தின் கீழ் இருவருக்கும் விரைவில் தண்டனை அளிக்கப்பட உள்ளது.

நியூயார்க் நீதிமன்றம் லஞ்சம் வாங்கிய தமிழக அதிகாரிகள் பற்றிய விவரம் அளிக்க மறுத்துள்ளது.