கான்பெரா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நிக் கிரியாஸ்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், இம்மாதம் 31 முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பில் அமெரிக்காவானது, உலகிலேயே முதலிடத்தில் இருப்பதால், இத்தொடரில் பங்கேற்பதில் பலருக்கு அச்சம் நிலவுகிறது.

‘உலக நம்பர் 1’ வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி ஏற்கனவே விலகினார். இந்நிலையில், அதே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 25 வயதான நிக் கிரியாஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மக்களின் பொருட்டு இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.