அமெரிக்க ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார். இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டஸ்கோவுடன் மோதி தோல்வியுற்றார்.

Andy-Murray

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது சுற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே முர்ரேவுக்கு கடும் சவாலாக விளங்கிய வெர்டஸ்கோ முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆண்டி முர்ரே 2வது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பிறகு அடுத்த இரு செட்களையும் அபாரமாக விளையாடி 6-4, 6-4 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

இதையடுத்து இறுதி சுற்றில் வெர்ட்ஸ்கோ 7-5, 2-6, 6-4, 6-4 என்ற கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். டென்னிஸ் விளையாட்டின் முன்னணி வீரரான ஆண்டி முர்ரே அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.