யு.எஸ். ஓபன் – சாம்பியன் ஆனார் ஜப்பானின் ஒசாகா!

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் போட்டியில், ஜப்பான் நாட்டின் ஒசாகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

உலகளவில் நம்பர்-9 வீராங்கனையாக உள்ள ஜப்பானின் ஒசாகா, உலகளவில் நம்பர்-27 வீராங்கனையாக உள்ள பெலாரஸ் நாட்டின் அஸரன்காவை எதிர்த்து இறுதிப்போட்டியில் மோதினார்.

இப்போட்டியில், முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஒசாகா, இரண்டாவது செட்டில் 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டில் 6-3 என்ற கணக்கிலும் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இது இவரின் இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும் & மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.