நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உடன் மோதினார் டொமினிக். இப்போட்டியில், முதலிரண்டு செட்கள் 6-2, 6-4 என்ற கணக்கில் ஜெர்மன் வீரர் வசம் சென்றது.

பின்னர், அடுத்த 2 செட்கள் 6-4, 6-3 என்ற கணக்கில் டொமினிக் வசமானது. பின்னர், வெற்றியாளரை முடிவுசெய்யும் இறுதி சுற்று நடைபெற்றது. டை பிரேக்கர் வரை சென்ற இப்போட்டியை, 7-6 என்ற கணக்கில் வென்ற டொமினிக் தியம், கோப்பையை தனதாக்கினார். இவர், உலகின் 3வது நிலை வீரராக தற்போது உள்ளார்.

மொத்தம் 4 மணிநேரம் 2 நிமிடங்கள் வரை நீடித்த இப்போட்டியின் மூலம், முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் டொமினிக் தியம்.

இவருக்கு வெற்றிக் கோப்பையுடன் சேர்த்து, ரூ.22 கோடி பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.