Random image

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி சுற்றுக்கு நுழைந்த செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம் வெற்றிப்பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டியில் லத்வியா வீராங்கனையை 6-3, 6-0 என வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

williams

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி சுற்றில் 6 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ், லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்க் கொண்டார். போட்டியின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய செரீனா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் செவஸ்டோவாவை துவம்சம் செய்து இறுதி சுற்றுக்குள் தடம் பதித்தார். இதையடுத்து தொடர்ந்து 9வது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதி சுற்றுக்கு செரீனா தகுதி பெற்றுள்ளார்.

இது குறித்து செரீனா பேசியதாவது, “ உண்மையில் இந்த வெற்றி எனகுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஓர் ஆண்டுக்கு முன்னர் நான் குழந்தை பெற்ற போது மருத்துவமனையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது களத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். இது அளவு கடந்த சந்தோஷத்தைத் அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக மிகவும் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன் “ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையடுத்து, வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்த்து செரினா பலப்பரீட்சை நடத்த உள்ளார்.