அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி நடால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் ரபேல் நடால் வெற்றிப்பெற்று அரையிறுதி சுற்றுக்கு நுழைந்தார். ஆஸ்திரேலியா வீரரை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தோற்கடித்து வெற்றிப்பெற்றார் நடால்.

nadal

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக தரவரிசையில் உள்ள முன்னணி வீரரும், நடப்பு சாம்பியனுமான நபேல் நடால் காலிறுதி சுற்றில், தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரார் டொமினிக் தீயமை எதிர்கொண்டார்.

இந்த போட்டியின் முதல் செட்டில் நடால் ஒரு புள்ளி கூட எடுக்காமல் 0-6 என்ற கணக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டார். அடுத்த செட்டில் சுதாரித்துக் கொண்ட நடால் அதனை கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4வது செட்டை டொமினிக் கைப்பற்றினார். இருவரின் வெற்றியையும் தீர்மானிக்கும் 5வது செட்டில் நடால் நீண்ட நேரம் ஆஸ்திரேலியா வீரருடன் போராட வேண்டி இருந்தது. இதையடுத்து, 0-6, 6-4,7-5,6-7(4-7),7-6(7-5) என்ற புள்ளிகளில் நடால் வெர்றிப்பெற்றார்.

இந்த வெற்றி அவருக்கு மிக கடுமையானதாகவே இருந்தது. சுமார் 4 மணி 48 நிமிட போராட்டத்திற்கு பிறகே ஆஸ்திரேலியா வீரரை நடால் வெற்றிப்பெற முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் அர்ஜெண்டினாவை சேர்ந்த 2009ம் ஆண்டு சாம்பியனான டெல்போட்ரோவை எதிர்த்து நடால் களமிறங்க உள்ளார்.

கார்ட்டூன் கேலரி