வாஷிங்டன் : மேம்பாலத்தில் இருந்து ரெயில் கீழே விழுந்து மூவர் மரணம் 

வாஷிங்டன்

யனிகள் ரெயில் தடம் புரண்டு மேம்பாலத்தில் இருந்து விழுந்ததால் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.   100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வாஷிங்டன் நகரின் சியாட்டில் பகுதியில் இருந்த போர்ட்லேண்டு வரை சரக்கு ரெயில் பாதை ஒன்று உள்ளது.   இந்த தடத்தில் முதன் முறையாக பயணிகள் சேவை அமுலுக்கு வந்துள்ளது.   நேற்று  ஒரு பயணிகள் ரெயில் புறப்பட்டுச் சென்றுள்ளது.  இந்த ரெயிலில் சுமார் 77 பயணிகளும் 7 ரெயில்வே ஊழியரும் இருந்துள்ளனர்.

இந்த ரெயில் டகோமா நகரின் தெற்குப் பகுதியில் மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த போது தடம் புரண்டதால் கீழே  விழுந்தது.   அப்போது அங்கு சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரிகள் மற்றும் பல்வேறு வாகனங்கள் மீது இந்த ரெயில் விழுந்ததினால்  பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.   இந்த விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர்  அத்துடன் 100 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி