அமெரிக்கா : போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் போலீஸ்

வாஷிங்டன்

மெரிக்காவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரி உள்ளனர்.

சென்ற மாதம் 25 ஆம் தேதி அன்று கருப்பினரான ஜார்ஜ் ஃபிளாயிட் என்னும் மினியபாலிஸ் பகுதியைச் சேர்ந்தவரை 4 காவல்துறையினர் கள்ள நோட்டு புகாரில் கைது செய்தனர்.  அவரை கை விலங்குடன் காரில் இருந்து தள்ளிய காவல்துறை அதிகாரி டெரக் சாவின் கழுத்தில் காலால் அழுத்தி உள்ளனர்.  அவர் மூச்சு விடமுடியவில்லை எனக் கதறியும் காவல்துறை அதிகாரி அழுத்தியதால் அவர் மரணம் அடைந்தார்.

இந்த காட்சி வீடியோ ஆக்கப்பட்டு வைரலாகி நாடெங்கும் கடும் போராட்டம் வெடித்துள்ளது.  அதையொட்டி டெரக் சால்வின் உள்ளிட்ட காவல்துறையினர் நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டு டெரக் சாவின் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஆனால் போராட்டம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.  சமூக வலி தளங்களில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு மேலும் மேலும் வலுத்து வருகிறது.

காவல்துறையினர் வெள்ளை மாளிகையில் போராட்டம் நடத்தியவர்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி விரட்டிய செய்தியும் பல இடங்களில் கறுப்பினத்தவர் கைது செய்யப்படும் செய்திகளும் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி உள்ளது.  இந்நிலையில் காவல்துறையினர் தங்கள் சக ஊழியரின் கொடூர நடவடிக்கைகளுக்கு  மன்னிப்பு கேட்கும் காட்சிகள்  வெளியாகி வருகின்றன.

நாட்டின் பல இடங்களில் சாலை ஓரங்களில் காவல்துறையினர் மண்டியிட்டு மக்களிடம் மன்னிப்பு கோரும் காட்சிகள் புகைப்படமாகி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.