ஆக்ரா வந்தடைந்தார் டிரம்ப்…. யோகி வரவேற்றார்.. கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

ஆக்ரா:

ந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று மதியம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதைத் தொடர்ந்து, தற்போது, உ.பி. மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தந்துள்ளார். அங்குள்ள உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்.

ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த டிரம்ப் தம்பதிகளுக்கு மாநில கவர்னர் ஆனந்திபென், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உயர்அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து விமான நிலையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளை டிரம்ப் கைதட்டி உற்சாகமாக ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொர்ந்து டிரம்ப் தம்பதிகள் கார் மூலம் சுமார் கி.மீ. தொலைவில் உள்ள தாஜ்மஹாலுக்கு புறப்பட்டு சென்றனர்.

டிரம்ப் தாஜ்மஹால்  வருகையையொட்டி, சாலையின் இருபுறங்களில் ஏராளமான மக்கள் கூடி நின்று வரவேற்பு அளித்து வருகின்றனர்.