சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்ற மெலானியா…. உதவி செய்த டிரம்ப்

அகமதாபாத்:

2நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமமான  சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். அப்போது, அவரது மனைவி மெலானியா, அங்குள்ள ராட்டையில் நூல்நுற்றார். அவருக்கு டிரம்ப் உதவி செய்தார்.

இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தம்பதிகள், முதன்முதலாக குஜராத்மாநிலம் அகமதாபாத் நகரில் தங்களது காலடியை பதித்தனர்.  அதைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக  விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். வழிநெடுக இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான அனைத்து மாநில கலைநிகழ்ச்சிகள் மற்றும் மக்களும்  திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரும் வழியில் காந்தி தங்கியிருந்த  சபர்மதி ஆசிரமத்துக்கு தனது மனைவியுடன் சென்று சுற்றிப்பார்த்த டிரம்ப் அங்குள்ள ராட்டையை கண்டு அதிசயத்தார். ஆசிரம பெண்மணியிடம், ராட்டையில் நூல் நூற்பது குறித்து கேட்ட றிந்த மெலினா டிரம்ப், அதில் நூலை நூற்றார். அவருக்கு அதிபர் டிரம்பும் உதவி புரிந்தார். பின்னர்,  ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தனர்.

1 thought on “சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்ற மெலானியா…. உதவி செய்த டிரம்ப்

Comments are closed.