காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மனைவியுடன் மரியாதை! என்ன எழுதினார் தெரியுமா?

டெல்லி:

ந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை தனது மனைவி மெலினாவுடன் ராஜ்காட்டில் உள்ள  மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

2நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள டிரம்ப், நேற்று அகமதாபாத்தில் காந்தி ஆசிரமமான சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலையில், இன்று டெல்லி  ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு தனது  மனைவி மெலானியா உடன் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு, நினைவிடத்தை சுற்றி வற்தார்.  பின்னர், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அதில், ‘அமெரிக்க மக்கள் ஒரு இறையாண்மை மற்றும் அற்புதமான இந்தியாவுடன் வலுவாக நிற்கிறார்கள் – இது மகாத்மா காந்தியின் பார்வை. இது மிகப்பெரிய மரியாதை! ‘

நேற்று சபர்மதி ஆசிரமத்தில் வைத்திருந்த விருந்தினர் பதிவேட்டில், ஆசிரமம் பற்றியோ, காந்தியைப் பற்றியோ எழுதாமல், பிரதமர் மோடியைப் பற்றி எழுதியிருந்தது நேற்று சர்ச்சையான நிலையில், இன்று காந்தி நினைவிடத்தில் இருக்கும் விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப்  காந்தியை உயர்வாக எழுதி  கையெழுத்திட்டுள்ளார்.

அதுபோல, நேற்று மாலை தாஜ்மஹாலை பார்வையிட்ட டிரம்ப், அங்குள்ள விருந்தினர் புத்தகத்தில், தாஜ்மஹால் பிரமிப்பைத் தூண்டுகிறது, இந்திய கலாச்சாரத்தின் பணக்கார மற்றும் மாறுபட்ட அழகுக்கான காலமற்ற சான்று, நன்றி இந்தியா என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.