வாஷிங்டன்: வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ கெடுபிடியை அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஏதாவது பிரச்சினை செய்தால், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

“ஈரானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் ஏதாவது ஏடாகூடமாக நடந்துகொண்டால், அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும்” என்றுள்ளார்.

வளைகுடாப் பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ கெடுபிடிகள் மற்றும் ஈரானுடன் போரிட அமெரிக்கா தயாராகிறதா? ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்.

ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளதோடு, அந்நாட்டிலிருந்து இதுவரை எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகளையும் மிரட்டி, வியாபாரத்தை நிறுத்தச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.