நியூயார்க்,
மெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

உலகமே எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், டொனால்டு டிரம்ப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி  276 இடங்களில் வெற்றி பெற்றது.  ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் 218 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் டிரிம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து எலக்டோரல் காலெஜ் (electoral college)  என்னும் தேர்தல் சபை உறுப்பினர்கள் இணைந்து, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை முறைப்படி தேர்வு செய்வார்கள்.
அதன்படி நேற்று எலக்டோரல் காலெஜ் உறுப்பினர்கள்  வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் டிரம்ப் அதிபராக தேவையான 270 வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை மீண்டும் உறுதி செய்தார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ட்ரம்ப். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்பார். இவர் அமெரிக்காவின் 45-வது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.