வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் தன் மீதான கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளார்.


அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல், நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் ,மீண்டும் போட்டியிட உள்ள அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இது டிரம்ப்புக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

இதனால், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஜோபைடனை வீழ்த்த டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.  உக்ரைன் அதிபர் விலடிமிர் செலன்ஸ்கியிடம் அவர் ஜோ பைடனையும் அவரது மகனையும், உளவாளிகளைக் கொண்டு வேவு பார்க்குமாறு, அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான ‘ஆடியோ’ சமீபத்தில் வெளியானது.

 

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில், டிரம்ப் மீது, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், கண்டனத்  தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டிரம்ப் இந்த கண்டனத்  தீர்மானத்தை முறியடிக்‍கும் முயற்சியில் டிரம்ப்  ஈடுபட்டுள்ளார்   அத்துடன் இந்த கண்டனத் தீர்மான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு  தெரிவித்துள்ளார்.