பின்லாந்தில் ஜூலை 16ம் தேதி டிரம்ப் – புடின் சந்திப்பு

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சந்தித்து பேசுவார்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இருவரும் சந்தித்து பேசும் இடம், தேதி ஆகியவை இறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் ஜூலை 16ம் தேதி இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.