கமலா ஹாரீஸை விட தனக்கு அதிகளவு இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸை விட தனக்கு அதிகளவு இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை தொடர்ந்து தாக்கி கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அதிபர் தேர்தல் பிரச்சாரம் அமெரிக்காவில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந் நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல், கருப்பின மக்களின்  போராட்டத்தை  ட்ரம்ப் கையாண்ட விதங்களை கண்ட் மக்களுக்கு அதிருப்தி ஆளாகி உள்ளனர். ஆகையால் இந்த முறை ஜோபிடன் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜமைக்கா, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளது  அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

இந் நிலையில் தேர்சல் பிரச்சாரம் ஒன்றில் டிரம்ப் பேசி இருப்பதாவது: ஜோபிடன் ஆட்சிக்கு வந்தால் நிலைமை மோசமாகிவிடும்.  கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியாக இருக்கலாம். ஆனால் மிகவும் மோசமானவர். அவரை விட எனக்குதான் இந்தியர்கள் ஆதரவு அதிகம் என்று பேசி இருக்கிறார்.