வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி(அடுத்த மாதம்) இறுதியில் இந்தியாவிற்கு வருகைதர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுதொடர்பான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்பவர்கள், தங்களது பதவிகாலத்தில் முக்கிய உலக நாடுகளுக்கு குறைந்தது ஒருமுறையேனும் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில், அவர்கள் பல்லாண்டுகளான இந்தியாவிற்கும் வந்து செல்வதுண்டு. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்று தற்போது தனது நான்காவது மற்றும் இறுதியாண்டில் உள்ளார். இந்தாண்டின் இறுதியில் அவர் தேர்தலை சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில், அவர் பிப்ரவரி மாதம் இந்தியா வரவுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப்பை சந்தித்த அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஸ், இந்த ஏற்பாடுகளை துவக்கி வைத்தார்.

டொனால்ட் டிரம்ப் இந்தியா வரும்போது, அமெரிக்காவால் ரத்துசெய்யப்பட்ட இந்தியாவுக்கான ஜிஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.