Random image

இந்தியாவில் தங்கும் டிரம்பின் 36மணி நேர அட்டவணை!

டெல்லி:

ரண்டு நாள் பயணமாக இந்திய வரும் அமெரிக்க அதிபர் சுமார் 36 மணி நேரம் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர் கலந்துகொள்ளும் பயண விவரம் அட்டவணை வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் 7வது அதிபர் என்ற பெருமையை பெறுகிறார் டிரம்ப்.

தனது மனைவி மெலினாவுடன் இந்தியா வரும் டிரம்புக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பெயரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் தூரமான சுமார் 22 கி.மீட்டர் தூரத்துக்கு லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களில் குழுமி இருந்து அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளார்கள்.

சுமார் 36 மணி நேரம் இந்தியாவில் தங்கும்  டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து இறுக்கமாக (Tight Schedule) உள்ளன.

24ந்தேதி:  டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்

மதியம் 12.15 மணி: அகமதாபாத் சபர்மதி ஆசிரம் வருகை

மதியம் 01.05 மணி: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி -மொட்டேரா ஸ்டேடியம் மோடியும் கலந்துகொள்கிறார்.

மாலை 05.15 மணி: ஆக்ரா  – தாஜ்மஹால் (தனது மனைவி, மகள், மருமகன் உடன்)

25ந்தேதி:  டிரம்ப் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்

காலை 10.00 மணி: ராஷ்டிரபதி பவன் நிகழ்ச்சிகள் அதைத்தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி

அதைத்தொடர்ந்து

டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் இரு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வமான சந்திப்பு மற்றும் பேச்சு வார்த்தை.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் உள்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 07.30 மணி : டிரம்புடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

அதைத்தொடர்ந்து, இரவே இந்தியாவை விட்டு டிரம்ப் கிளம்புகிறார்.

இந்தியா வருகை தரும் டிரம்ப் தரப்பினரின் நிகழ்ச்சிகள் டைட்  ஷெட்யூலாக அமைக்கப்பட்டு உள்ளது…