வாஷிங்டன்: 

பெண்டகனிடம் இருந்து பயங்கரவாதிகளை தாக்கி அழிக்கும் பணியை அதிபர் ட்ரம்ப் பறித்துவிட்டார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இதுநாள்வரை சர்வதேச பயங்கரவாதிகளை இனங்கண்டு அவர்கள் குறித்த ரகசியங்களை பெண்டகனிடம் அளிப்பது வழக்கம்.

இதையடுத்து அந்தத் தகவலின் அடிப்படையில் பயங்கரவாதிகள் மீது பெண்டகன் தாக்குதல் நடத்தும்.

ஆனால் இந்த நடைமுறையை அதிபர் ட்ரம்ப் திடீரென  மாற்றியுள்ளார். ஏற்கனவே ஐந்து முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்காவில் குடியேற தடைவிதிப்பு, எச் 1 பி விசா, சீனப் பொருட்களுக்கு அதிகவரி என அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதேபோல் பென்டகன் வசம் இருந்த ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளை தாக்கி அழிக்கும் அதிகாரத்தை அதனிடமிருந்து  சிஐஏவுக்கு மாற்றி ட்ரம்ப்  ரகசியமாக உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வால்ஸ்ட்ரீட், முன்னாள் அதிபர் ஒபாமாவின் உத்தரவை டிரம்ப் மறைமுகமாக ரத்துசெய்திருப்பதாக விமர்சனம் செய்துள்ளது.