வாஷிங்டன்: எச்-1பி விசா வழங்கும் விஷயத்தில், அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான மசோதா அந்நாட்டு காங்கிரசில் கொண்டு வரப்பட்டது.
எச்-1பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க காங்கிரஸ்(நாடாளுமன்றம்) பிரநிதிகள் சபையிலும், மேலவையான செனட்டிலும் மசோதா கொண்டு வரப்பட்டது. அதில் எச்-1பி விசா வழங்கப்படுவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறமையான மாணவர்கள் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், அமெரிக்கப் பணியாளர்களுக்கு பதில் அந்த இடத்தில் எச்-1பி விசா பெற்ற வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதைத் தடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.