வாஷிங்டன்

மெரிக்காவின் வெளியுறவுத்துறை கத்தாரை ஒதுக்கியதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும் என அரபு நாடுகளை கேட்டுள்ளது

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கத்தார் நாட்டை தீவிரவாத காப்பாளர் எனக் கூறி இருந்தார்.  ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை மேற்கூறியவாறு மற்ற அரபு நாடுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.

சவுதி அரேபியா, கத்தார், யுஏஈ ஆகிய மூன்றுமே அமெரிக்காவின் நேச நாடுகள்.  கத்தாரில் அமெரிக்காவின் ராணுவ தளம் இயங்கி வருகிறது,  அதில் அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் 11000 வீரர்கள் உள்ளனர்.

சமீபத்தில் சவுதி அரேபியா, எகிப்து, யுஏஈ போன்ற அரேபிய நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியதை அமெரிக்கா விரும்பவில்லை என தெரிகிறது.  இந்த பிரச்னையை முடிக்க அமெரிக்கா எண்ணுகிறது.   சுமுகமான ஒரு முடிவுக்கு விரைவில் வரவேண்டும் என அரேபிய நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.   தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என கத்தார் நாட்டுக்கு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் இதுவரை கத்தார் தன் மேல் சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் மறுத்து வருகிறது