us_9
அமெரிக்காவின் சிறப்புக் கூட்டாளியாக, இந்தியாவுக்கு அந்தஸ்து அளிக்க, அந்நாட்டு  நாடாளுமன்றம் மறுத்துவிட்டது.
அண்மையில்  பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ராணுவத்துறையில் அமெரிக்காவின் சிறப்பு கூட்டாளி அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிக்குமாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேக் கெய்ன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
ஆனால், அந்த மசோதா நிறைவேற்றப்படத் தேவையான வாக்குகள் கிடைக்காததால், இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
இது, இந்தியாவுக்கு அரசியல் ரீதியான பின்னடைவாகக் கருதப்படுகிறது.