வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க EB-3 கிரீன்கார்டு விதிப்படி, குடியேறிய ஒரு வெளிநாட்டவர் அதைப் பெற வேண்டுமானால் 195 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க, செனட்டர் அனைவரும் சேர்ந்து ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டுமென கோரியுள்ளார் குடியரசு கட்சியின் செனட்டரான மைக் லீ.
EB-3 கிரீன்கார்டு என்பது, வெளிநாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய ஒருவர், அந்நாட்டில் நிரந்தக் குடியுரிமையைப் பெற்றதற்கான ஒரு சான்றாவணமாகும்.
“ஆனால், தற்போதைய நிலையில், குடியேறிவர்களின் குழந்தைகளும்கூட, அந்த அந்தஸ்தைப் பெறமுடியாத நிலை உள்ளது” என்று கூறியுள்ளார் அந்த செனட்டர்.
கடந்த 2019 நிதியாண்டில், இந்தியாவிலிருந்து குடியேறியோரில், மொத்தம் 9008 பேர் EB-1 வகை கிரீன்கார்டையும், 2908 பேர் EB-2 வகை கிரீன்கார்டையும், 5083 பேர் EB-3 வகை கிரீன்கார்டையும் பெற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.