வாஷிங்டன்

டக்கு அட்லாண்டிக் போர் ஒப்பந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இணையான அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

வடக்கு அட்லாண்டிக் போர் ஒப்பந்த அமைப்பை சுருக்கமாக நேட்டோ என அழைக்கபடுகிறது.   இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை.   ஆகவே அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் ஹோல்டிங் இதற்கு இணையான அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிக்க ஒப்புதல் தரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் தற்போது அமெரிக்க செனட் எனப்படும் பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது.  இந்த தீர்மானத்துக்கு அமெரிக்க செனட்டின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவைதனது முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என அறிவித்தது.  அதை ஒட்டி இந்த அனுமதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அனுமதி மூலம் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை இந்தியாவால் விரைவாக வாங்க முடியும்.  இந்தியாவுக்கு அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவைகளையும் இனி எளிதாக பெற முடியும்.    இந்த தீர்மானத்தை கொண்டு வந்த ஜார்ஜ் ஹோல்டிங் அமெரிக்காவின் எஃப் 16 விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்தவர் ஆவார்.