வாஷிங்டன்

ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர் லூக் லெட்லோ கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க மக்களவை தேர்தலில் லூசினா மாகாணத்தை சேர்ந்த லூக் லெட்லோ வெற்றி பெற்றுள்ளார்.   இவர் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.  சில தினங்களுக்கு முன்பு இவருக்கு செனட்டராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது.

இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  சுமார் 41 வயதாகும் இவர் சிகிச்சை பெற்ற போதும் கொரோனா தொடர்பான மேலும் பல உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன.  சிகிச்சை  பலனின்றி லூக் லெட்லோ மரணம் அடைந்துள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதுவரை அமெரிக்காவில் சுமார் 1.99 கோடி பேர் பாதிப்பு அடைந்து அதில் 3.46 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  சுமார் 1.18 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 77.86 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.