கொரோனா வைரஸ் : அமெரிக்காவில் புதிய சிகிச்சை முயற்சி

மாகா

மெரிக்காவில் ஒமாகாவில் அமைந்துள்ள நெப்ராஸ்கா ஆய்வகம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான புதிய சிகிச்சை முறையில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது.

 

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.   அந்த ஆட்கொல்லி வைரஸ் சீனா முழுவதிலும் பரவி சீனாவுக்கு வெளியிலும் 24 நாடுகளில் பரவி உள்ளது.   குறிப்பாக தென் கொரியா மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  உலக சுகாதார மையம் இதையொட்டி அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

அமெரிக்காவில் ஒமாகாவில் உள்ள நெப்ராஸ்கா ஆய்வகம் என்னும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் எபோலா வைரஸ் தொற்றின் போது மருந்துகள் தயாரித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்திருந்தது.  தற்போது இதே நிறுவனம் கொரோனா வைரஸ் நோய்க்கான சிகிச்சை மருந்துகள் தயாரிக்கும் முயற்சியில் இயங்கி உள்ளது.

கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி எடுத்துள்ள முதல் அமெரிக்க நிறுவனமான நெப்ராஸ்கோ பல வழிகளில் ஆய்வுகளை நடத்தி வருகிறது.   இந்த ஆய்வின் முடிவில் உலகின் 50 இடங்களில் இருந்து 400 நோயாளிகள் ஆய்வில் இணைக்கப்பட உள்ளனர்.   இது குறித்து இந்த ஆய்வுகளின் மேற்பார்வையாளர் டாக்டர் ஆண்டிரே கசின் தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

அவர், “கொரோனா வைரஸ் பாதிப்பினால் தவிக்கும் மக்கலுக்கு உதவுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.   ஜப்பானில் ஒரு கப்பலில் இருந்து வந்த 14 பேருக்கு  நெப்ராஸ்கோ  சிகிச்சை அளித்தது.   அவர்களில் 12 பேருக்கு கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெஇர்ய வந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து வாஷிங்டன் மாநிலத்துக்கு வந்துள்ள ஒரு நபர் உள்ளிட்ட சில நோயாளிகளுக்கு கிலியட் தயாரித்த ரெம்ட்சிலிர் என்னும் மருந்து அளிக்கப்பட்டது.  அவர் விரைவில் சிகிச்சை முடிந்து வெளியேறி விட்டார்.  கோவிட் 19 பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு  அவர்களுடைய அறிகுறிகள் அளவைப் பொறுத்துச் சோதனையில் இணைக்கப்படுவார்கள்.

இந்த நோய் தாக்கத்தில் உலகெங்கும் 80000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சுமார் 2700க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.  இவர்களில் பெரும்பாலானோர் சீனாவை வசிப்பவர்கள் ஆவார்கள்.   சீனாவில் இந்த நோயாளிகளுக்காக இரண்டு விதமான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அதில் ஒன்று ரெம்ட்சிலிர் அதாவது நியூக்ளியோடைடு அன்லாக்ஸின் பிரிவு மருந்து ஆகும்.    இது அமெரிக்க கிலியட் சயின்ஸ் தயாரிப்பாகும்.  மற்றது லோபினாவிர் மற்றும் ரிடோவினர் கொண்ட எச் ஐ வி மருந்தாகும்..   இந்த புதிய சோதனைகளின் மூலம் இந்த வைரஸ் தாக்குதலுக்கான முழுத் தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.